Wed. Nov 19th, 2025


செல்போனில் பதில் அனுப்பி தேர்வில் காப்பியடித்த சம்பவம் தென்காசியில் பரபரப்பு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற காவலர் தேர்வில், தென்காசியில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் பள்ளி மையத்தில், தேர்வு எழுத வந்த சிவகிரியைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (23) என்பவர், செல்போனின் மூலம் பதில்களை பார்த்து தேர்வு எழுதியது தேர்வாளர் கண்காணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் உடனடியாக பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணையில், வெளியில் இருந்து பதில்களை அனுப்பி உதவியதாக சிவகிரியைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் மல்லிகா (20) ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், கோபி கிருஷ்ணன் செல்போனை மையத்துக்குள் கொண்டு சென்றது எப்படி என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: ராமர்

By TN NEWS