விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள குபேர் பிளாசா வணிக வளாகம் முன்பகுதியில் பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்தே கிடப்பது கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருகிறது.
இது குறித்து தமிழ்நாடு டுடே செய்தியாளர் குழுவினருக்கு, அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். துர்நாற்றத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சாக்கடை அருகே உள்ள உணவகம் மற்றும் தேநீர் கடையில் உணவு உட்கொள்வோர் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், திறந்த சாக்கடையால் சில நேரங்களில் பாதசாரிகள் இடறி விழும் அபாயங்களும் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் பொதுமக்கள், “நகராட்சி அலட்சியம் சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது” எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திடம் கீழ்கண்ட கேள்விகள் எழுப்பப்படுகின்றன:
1️⃣ கடந்த ஆறு மாதங்களாக மூடப்படாத நிலையில் உள்ள பாதாள சாக்கடையை சீரமைக்க நகராட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
2️⃣ நகராட்சிக்கு இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டனவா?
3️⃣ அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் தினமும் பணியாற்றும் நிலையிலும், சாக்கடை பராமரிப்பு எதனால் புறக்கணிக்கப்படுகிறது?
4️⃣ பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள் நலனை முன்னிட்டு உடனடி நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையை மூடி பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரப்படுகிறது.
தமிழ்.மதியழகன்
விழுப்புரம் மாவட்டம்
#நகராட்சி விழுப்புரம், #மாவட்ட ஆட்சியர்,#சுகாதாரத்துறை,#சுகாதார அதிகாரிகள்,#சுகாதார அமைச்சர்,#தமிழ்நாடு டுடே விசாரணை குழு, # விழுப்புரம் மாவட்டம்
