தஞ்சாவூர் அரசு விளையாட்டு துறை சார்பில், பொன்னையா ராமஜெயம் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் கோ-கோ விளையாட்டு போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.
19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆண்கள் அணியில் முதலிடமும், பெண்கள் அணியில் இரண்டாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றியாளர்களுடன் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன், தஞ்சை மாவட்ட கோ-கோ செயலாளர் தென்னரசு, முன்னாள் இந்திய வீரர் தாமரைச்செல்வன், விஜயகுமார், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர் கலந்து கொண்டனர்.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்