மின் கட்டணத்தில் திடீரென அபரிமித உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு தீர்வு காண, மின்வாரியம் புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
புதிய விதிமுறைப்படி, வழக்கமாக ரூ.500 அளவில் மின்கட்டணம் வரும் வீட்டிற்கு திடீரென ரூ.5,000 போன்ற அபரிமித கட்டணம் வந்தால், அது கணினி பதிவேட்டில் நேரடியாக பதிவு செய்யப்படாது. அதற்கு பதிலாக, மின்வாரிய அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்வார்.
ஆய்வின் பின்னர், உண்மையான மின்பயன்பாடு கணக்கீடு செய்து அதற்கேற்ற கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம், திடீரென அதிக மின்கட்டணம் வந்து அதிர்ச்சியடைந்த குடும்பங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மென்பொருள் தயாரிப்பு வேகம்
இதற்கான சிறப்பு மென்பொருள் தயாரிப்பை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு பயனாளரின் சராசரி மின்பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் இதை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சேக் முகைதீன், இணை ஆசிரியர், Tamilnadu Today