Fri. Aug 22nd, 2025

மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு – காவல் ஆணையர் லோகநாதன் தகவல்

மதுரை மாநகரில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை மாநகரில் கடந்த ஆண்டில் எத்தனை விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டதோ, அதே எண்ணிக்கையே இந்த ஆண்டும் அனுமதிக்கப்படும். கூடுதலாக சிலைகள் வைக்க அனுமதியில்லை” எனக் கூறினார்.

இது, சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அவர் விளக்கியுள்ளார்.

ராமர், திருச்சி மாவட்டம்



By TN NEWS