வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகர காவல் ஆய்வாளர் ஆர். செல்வம் தலைமையில் போலீசார் காட்பாடி சாலையில் உள்ள அஸ்வினி பார்க்கிங் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் சின்னப்பன் (த.பெ. நாகராஜ், வயது 35, கல்லேரி), ஏழுமலை (த.பெ. சுப்பன், வயது 20), ஆறுமுகம் (வயது 24), பவுன் (த.பெ. பெரிய கண்ணன், பெரிய ஏரியூர் வேப்பங்குப்பம்), சதாசிவம் (த.பெ. பவுன், வயது 45), மனோகரன் (த.பெ. கர்ணன், வயது 56, மோர் தானா) ஆகிய 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
பவுன் மற்றும் அவரது மகன் சதாசிவம் ஆகியோர் பலகைகளை வைத்து நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்து வழங்கியவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
– குடியாத்தம் செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்