சாம்பவர்வடகரை அங்களாபரமேஸ்வரி கோயில் முளைப்பாரி திருவிழாவில் இரு பிரிவுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு – ஒரு பிரிவினர் முளைப்பாரி ஊர்வலமாக சென்று கரைத்தனர்.
தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்களாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் முளைப்பாரி திருவிழாவை ஒட்டி, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சர்ச்சை உருவாகியுள்ளது.
இன்று காலை, முளைப்பாரிகளை கோவில் முன்பு வைத்து, பெண்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அவர்களது கோரிக்கைகள் மீது கவனம் செல்லாததால், ஒரு பிரிவினர் முளைப்பாரியை ஊர்வலமாக அழைத்து மதுரவாணியம்மன் கோயிலில் வைத்து கும்மி பாடலுடன் வழிபாடு நடத்தி, பின்னர் அதை சிற்றாறில் கரைத்தனர்.
இச்சம்பவம் திருவிழா அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். போலீசார் மற்றும் கிராம நிர்வாகம் இந்நிலையில் பொது அமைதியை காக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட தலைமை நிருபர் ஜோ. அமல்ராஜ்