Fri. Aug 22nd, 2025

குடியாத்தத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜீவரத்தினம் அவர்கள் தலைமையினும், வட்டத் தலைவர் செந்தில் மற்றும் காந்தி முன்னிலை வகித்தனர்.
வட்டச் செயலாளர் சசிகுமார் வரவேற்புரையாற்றினார்.

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்,

பிரபாகரன் சபரிமலை

செந்தமிழ் செல்வன்

உஷா

பெரியசாமி

லதா
உள்ளிட்ட பலர் பங்கேற்று, கிராம நிர்வாக அலுவலர்களின் நலன்களை உறுதி செய்யும் விதமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நிகழ்ச்சியின் இறுதியில் வெங்கடாஜலபதி நன்றியுரை ஆற்றினார்

கே.வி. ராஜேந்திரன்,
தாலுக்கா செய்தியாளர், குடியாத்தம

 

By TN NEWS