தஞ்சாவூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்: சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தலைமையில் கோரிக்கைகள் பெறப்பட்டது
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. T.K.G. நீலமேகம் அவர்கள் தலைமையில், “உங்களுடன் ஸ்டாலின்” மக்கள் தொடர்பு முகாம் தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண்கள் 28, 29 மற்றும் 30 பகுதிகளில் நடைபெற்றது.
இந்த முகாமின் மூலம் பொதுமக்களிடமிருந்து அரசுத் திட்டங்கள், குடிநீர், சாலை, கழிவுநீர், வீடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட தேவைகள் குறித்த கோரிக்கைகள் பெறப்பட்டன.
இந்நிகழ்வில்,
கோட்டை பகுதி கழகச் செயலாளர்
மேத்தாகீழவாசல் பகுதி கழகச் செயலாளர் நீலகண்டன்
மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமாரி, ஆனந்த்
கழக நிர்வாகிகள் காசிபாண்டியன், தம்பா ராமச்சந்திரன், சுரேஷ், சக்திவேல் உள்ளிட்டோர்
மாநகராட்சி மற்றும் அரசு துறை அதிகாரிகள்
பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கோரிக்கைகளை பதிவு செய்தனர்.
இந்த முகாம் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நேரில் அறிந்து தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றியது.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்,
முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்