தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் – தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவ வைணவ சங்கமமான சங்கரநாராயணசாமி திருக்கோவிலில், வருடாந்திர ஆடித்தபசு திருவிழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
இவ்விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று (ஆகஸ்ட் 5) அதிகாலை, கோமதி அம்பாளுடன் சங்கரநாராயணசாமி திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வழிபாடுகளில் பங்கேற்றனர்.
பக்தர்களின் கோஷமோடு, இசைக்குழுவின் முழக்கத்துடன், நகரமுழுவதும் ஆன்மிக உற்சாகம் பறைசாற்றப்பட்டது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது.
– தென்காசி மாவட்ட தலைமை நிருபர்
ஜோ. அமல்ராஜ்.