Wed. Oct 8th, 2025

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், முன்னாள் முதலமைச்சரும், திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி செயலாளர் உதயகுமார், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முரளி ராஜா  குட்டியப்பா, அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மற்றும் பலர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் பிற்பகுதியில், விவசாயிகள் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்த மனுக்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வழங்கினர். அவர் அவற்றை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

– ஆலங்குளம் தாலுகா செய்தியாளர்
மணிகண்டன்

By TN NEWS