தஞ்சையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை பெரிய கோயில் அருகிலும், கரை புரண்டு ஓடும் கல்லணை கால்வாய், புது ஆற்று படித்துறை, வெண்ணாற்றாங்கரை, வடவாறு நாகநாதசுவாமி படித்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் காவிரி தாயை வணங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
புதுமணத் தம்பதிகள் புத்தாடை அணிந்து, பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு செய்தனர்.
– இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்.