“மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எழுச்சி சுற்றுப்பயணம் – ஆலோசனைக் கூட்டம் குடியாத்தத்தில்.
தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முன்னெடுத்து வரும் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எழுச்சி சுற்றுப்பயணம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகருக்கு ஆகஸ்ட் 14 அன்று வருகை தரவுள்ளார்.
இதனை முன்னிட்டு இன்று காலை குடியாத்தம் ஆர்.எஸ்.ரோடு ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர கழக அவைத் தலைவர் ஆர்.கே. அன்பு அவர்கள் தலைமை தாங்கினார்.
நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா மூர்த்தி, அமுதா சிவப்பிரகாசம், காடை மூர்த்தி,
மாவட்ட சார்பு அணி செயலாளர் எஸ்.எஸ். ரமேஷ்குமார்,
எஸ்ஐ. அன்வர் பாஷா, மாலிப்பட்டு பாபு, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த. வேலழகன், கழக அமைப்புச் செயலாளர் வி. இராமு, மாவட்ட பொறுப்பாளர் சதீஷ் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
கூட்டத்தில் ஏ. ரவிச்சந்திரன், மாயா பாஸ்கர், அமுதா கருணா, எஸ்.என். சுந்தரேசன், எம்.கே. சலீம், அட்சயா வினோத்குமார், ஜி. தேவராஜ், எஸ்.டி. மோகன்ராஜ், சேவல் நித்தியானந்தம், தென்றல் குட்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,
உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன், சிட்டிபாபு, தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. மகாலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்