வேலூர் மாவட்டம் குடியாத்தம் – அனுமதியின்றி சாமி சிலை வைத்ததால் 16 பேர் கைது.
குடியாத்தம் என்.எஸ்.கே. நகர் பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் கட்டிய மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடைபெற்று வந்தது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின்படி கவுண்டன்ய மகா ஆற்றில் கட்டப்பட்டிருந்த சுமார் 1500 வீடுகள் மற்றும் கோயில்கள் இடித்து அகற்றப்பட்டன.
இதையடுத்து, அப்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் பொதுமக்கள் மாரியம்மன் சிலையை வைத்து வழிபாடு செய்து வந்தனர்.
இந்நிலையில், அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததால், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த சிலையை கைப்பற்றினர்.
அனுமதி இல்லாமல் சிலை வைத்தது தொடர்பாக 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்காலிகமாக அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் – கே.வி. ராஜேந்திரன்