Tue. Aug 26th, 2025



தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு முகாம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் (ஐ.ஏ.எஸ்) துவக்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சிவராஜ், உதவி செயற்பொறியாளர் ஜெயலலிதா, வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, மாவட்ட ஆட்சித் தலைவரின் வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ், ஓலத்தேவராயன் பேட்டை அறிவழகன், நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம், காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பழனியப்பன், திருவோணம் விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னத்துரை, ஆம்பலாப்பட்டு தங்கவேல், நாகாச்சி கோவிந்தராஜ் உள்ளிட்ட பல விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் தனியார் நிறுவன பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவசாயிகள் நேரடியாக கலந்துரையாடி விளக்கங்களைப் பெற்றனர்.

இந்நிகழ்வில்,

வேளாண் இயந்திரங்களை இயக்கும் மற்றும் பராமரிக்கும் முறைகள்,

செய்யக்கூடியது / செய்யக்கூடாதது,

பழுதுகளை கண்டறியும் விதிகள்,

உதிரி பாகங்கள், மசகு எண்ணெய், உயர்வு எண்ணெய் பயன்பாடு போன்ற விவரங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.


விவசாயிகள் தங்களது டிராக்டர்களை முகாமிற்கு கொண்டு வந்து இலவசமாக பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் வசதி பெற்றனர்.

முகாமின் இறுதியில், அனைவருக்கும் டிராக்டர் பராமரிப்பு கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

– இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்

By TN NEWS