Tue. Aug 26th, 2025

வீரகேரளம்புதூர் வட்டம் ராமனூர் கிராமத்தில் பழமையான பாலத்தினால் அதிகரிக்கும் ஆபத்து, புதிய பாலம் அமைக்க கோரிக்கை!

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம், கலிங்கப்பட்டி அருகே உள்ள ராமனூர் கிராமத்தில் சாலையின் வளைவுகளில் அமைந்துள்ள பழமையான பாலம் தற்போது மோசமான நிலையில் உள்ளது.

இந்தப் பாலம் உடையும் தருவாயில் இருப்பதால், போக்குவரத்திற்கு பெரும் அபாயமாக மாறியுள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படும் ஆபத்தான சூழலில், வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இதனால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய மேல் மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, ராமனூர் கிராமத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சக்திவேல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

– ஆலங்குளம் தாலுகா செய்தியாளர்: மணிகண்டன்

By TN NEWS