Tue. Aug 26th, 2025

 

 

தென்காசி சுரண்டையில் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
மகளிர் உரிமை தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தென்காசி துணை ஆட்சியர் முத்துராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தேரர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர், வீ.கே. புதூர் தாலுகா வட்டாட்சியர் சுடலை மணி, துணை வட்டாட்சியர் சீனி பாண்டி, நகராட்சி ஆணையாளர் ரமா திலகம் ஆகியோர் பங்கேற்றனர்.

பொதுமக்களிடமிருந்து மகளிர் உரிமை தொகை, பட்டா, பட்டா பெயர் மாற்றம், சொத்து வரி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாம் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் நேரடியாக அதிகாரிகளிடம் சேர்க்கப்பட்டு, தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஜோ.அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் – தலைமை செய்தியாளர்.

By TN NEWS