Tue. Aug 26th, 2025



பதிவு தபால் மூலம் கடிதங்களை அனுப்பும் சேவை ரத்து  செய்ய தபால் துறை முடிவு செய்திருக்கிறது.

தபால் சேவையில் முக்கிய இடம் பிடித்துள்ள பதிவு தபால் முறை ரத்து செய்யப்பட்டு ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட உள்ளது.

எனவே இனி பதிவு தபால் என்ற வார்த்தையை தபால் துறையில் காண முடியாது. வரும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து இந்த நடவடிக்கை அமலுக்கு வருகிறது.

தபால் சேவைகளை சேவைகளை நெறிப்படுத்துதல்,  கண்காணிப்பை மேம்படுத்துதல்  சேவைகளை ஒருங்கிணைத்து   வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அஞ்சல் துறை  தெரிவித்திருக்கிறது.

சேக் முகைதீன் – இணை ஆசிரியர்.

By TN NEWS