Tue. Aug 19th, 2025

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் 7வது ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது – 2025
இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணனுக்கு விருது

நெய்யாற்றங்கரை:
நூருல் இஸ்லாம் உயர் கல்வி நிலையமும் (நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம்) மற்றும் நிம்ஸ் மெடிசிட்டி இணைந்து வழங்கும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது இந்த ஆண்டு 7வது முறையாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (ISRO) தலைவர் டாக்டர் வி. நாராயணனுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் செய்த முக்கிய பங்களிப்புகளை பாராட்டும் விதமாக வழங்கப்படுகின்றது. ஆகஸ்ட் 4, 2025 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நிம்ஸ் மெடிசிட்டி வளாகத்தில் நடைபெறும் விழாவில், கேரள மாநில ஆளுநர் திரு. ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் அவர்கள் விருதினை வழங்க உள்ளார்.

விருது விவரங்கள்:

ரூ. 1,00,000 பணப்பரிசு

நினைவுப் பலகை

மதிப்பளிப்பு சான்றிதழ்

தேர்வுக்குழு:

வேந்தர் டாக்டர் ஏ.பி. மஜீத் கான், இணைவேந்தர் எம்.எஸ். ஃபைசல் கான், துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஆகியோர் இணைந்து செயல்படும் குழுவால் டாக்டர் வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருது பெறுபவர்:

நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வி. நாராயணன், 1984ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தவர். அவர் GSLV Mark III ராக்கெட்டுக்கான C25 க்ரயோஜெனிக் கட்டத்தின் திட்ட இயக்குநர், ‘ககனயான்’ மனிதர் பயணம் திட்ட தேசிய சான்றளிப்பு குழுத் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

IIT காரக்பூரில் M.Tech (க்ரயோஜெனிக் என்ஜினீயரிங்) மற்றும் Ph.D (விமானவியல் பொறியியல்) பட்டங்களை பெற்றவர். இஸ்ரோவுக்கு முன்பு BHEL, திருச்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பாரம்பரியத்தையும் கனவுகளையும் கௌரவிக்கும் விதமாக இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

– ஜோ. அமல்ராஜ், தலைமை செய்தியாளர், தென்காசி மாவட்டம்

By TN NEWS