Wed. Aug 20th, 2025

திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போலீஸார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

12 நாட்களுக்கு மேலாக தேடிவந்த தனிப்படை போலீஸார், இன்று மாலை ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக இருந்த ஒருவரை பிடித்தனர். அவரின் உடை மற்றும் உருவ அமைப்பு, சம்பவ இடம் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானவருடன் ஒத்ததாக தெரியவந்தது.

பின்னர், குறித்த இளைஞரை திருவள்ளூர் மாவட்டத்துக்கு அழைத்து வந்து ரகசிய விசாரணை நடத்தினர். அவரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டியபோது, தன்னை வன்கொடுமை செய்தவர் இவர்தான் என சிறுமி அடையாளம் கண்டதாக தகவல்.

சூளூர்பேட்டையில் தாபா உணவகத்தில் வேலை பார்த்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய தகவல்கள்

சிசிடிவி காட்சியிலிருந்த அதே உடையுடன் சுற்றித்திரிந்தபோது கைது

தனிப்படையினர் விசாரணையில் கைதானவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்

20 தனிப்படைகள் தேடிவந்த நிலையில், 13-வது நாளில் கைது


மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

– தென்காசி மாவட்ட தலைமை நிருபர் ஜோ அமல்ராஜ்

By TN NEWS