Mon. Jan 12th, 2026


எடப்பாடி பழனிசாமிக்கு சந்தனமாலை அணிவித்து வாழ்த்து – முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் அருகில்.

தஞ்சாவூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்கள், தற்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அஇஅதிமுக) இணைந்துள்ளார். இந்த நிகழ்வை ஒட்டி, அவர் அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து, சந்தனமாலை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் காமராஜ், மத்திய மாவட்டச் செயலாளர் மா. சேகர், மாநகரச் செயலாளர் சரவணன், அமைப்புச் செயலாளர் காந்தி ஆகியோர் அருகில் உள்ளனர்.

Dr. பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்கள்,

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க செயலாளராக

பாரத சிற்பி அறக்கட்டளை நிறுவனராக

“தமிழ்நாடு டுடே” இதழின் முதன்மை செய்தியாளராக
பன்முகப் பொறுப்புகளில் செயல்பட்டு வருகிறார்.


அவரது அஇஅதிமுகவில் இணைதல், கட்சித் தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

By TN NEWS