Thu. Aug 21st, 2025

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் – பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குடியாத்தம், ஜூலை 24:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, பால் குட ஊர்வலம் செவ்வனே நடைபெற்றது.

முன்னதாக, பிச்சனூர் நேதாஜி இரண்டாவது தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின் அங்கிருந்து பால் குடம் ஊர்வலம் துவங்கி, மேள தாளங்கள், முழுங்க, சிலம்பாட்டம், நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பவனி நிறைவடைந்தது. அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.

பின்னர், பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த புனித நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் இமயவரம்பன், சொக்கலிங்கம், ராகவன், யுவராஜ் மற்றும் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

– குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS