திருப்பூர் ஏப் 22,
*கூட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.*
*பூலுவப்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட கூட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் சிவப்பு, வெள்ளை ,கருப்பு நிறத்தில் அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது சட்டப்படி குற்றமாகும்.*
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனு…
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள கே.2082 நெருபெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கிளை பூலுவப்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் சிவப்பு, வெள்ளை ,கருப்பு நிறத்தில் அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக அகற்றவும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.2082 நெருபெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் வாவிபாளையம் பகுதியில் செயல்படுகின்றது.
இதனுடைய கிளை P.N.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு கிழக்கு பகுதியிலுள்ள அரசியல் கட்சி பிரமுகருக்கு சொந்தமான தனியார் வணிக ரீதியான வளாகம் உள்ளது.
இந்த வணிக ரீதியான வளாகத்திலுள்ள கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்படி கே.2082 நெருபெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பூலுவப்பட்டி கிளை வங்கி திறக்கப்பட்டது
இந்த நிலையில் மேற்படி கூட்டுறவு வங்கிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பெயர் பலகையில் அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் சிவப்பு, வெள்ளை ,கருப்பு நிறத்தில் அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி ஏழை பணக்காரர், அரசியல் கட்சிகள், நுகர்வோர்கள் என எவ்வித பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் பொதுவாக தான் இருக்க வேண்டுமென்பதற்காக தான் தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரியாக நீள நிறத்தில் பெயர் பலகையில் வெள்ளை நிறத்தில் எழுத்து இருக்க வேண்டுமென்பது அரசாங்க சட்டமாகும்.
ஆனால் மேற்படி மேற்படி கே.2082 நெருபெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பூலுவப்பட்டி கிளை வங்கியின் பெயர் பலகையில் அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் சிவப்பு, வெள்ளை ,கருப்பு நிறத்தில் அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது சட்டப்படி குற்றமாகும்.
எனவே உடனடியாக இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான எடுக்கவும் அரசியல் கட்சி கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்ற போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் சரவணக்குமார்.