Tue. Jul 22nd, 2025


குமரன் தனியார் மருத்துவமனைக்கு முன்பாக சாலையோரம் நிறுத்தப்படும் வாகனத்தினால் போக்குவரத்து இடையூறு.

*வாகனங்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்.*


*சாலை விதிகளை மீறி குமரன் தனியார் மருத்துவமனைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல வழி இல்லை.*

இது தொட‌ர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில்….

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது மண்டலம் 22வது வார்டு வடக்கு வட்டத்திலுள்ள PN.ரோடு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள குமரன் தனியார் மருத்துவமனைக்கு முன்பாக உள்ள சாலையில் இருபுறமும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக குமரன் தனியார் மருத்துவமனைக்கு வருகின்ற இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சாலையிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவ மாணவியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பிற வாகனங்களும் சாலையிலேயே செல்ல முடியாத அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தேவையில்லாத வீணான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, அந்த இடத்தில் தினமும் கடும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை

அந்த சாலையோரத்தில் குமரன் தனியார் மருத்துவமனைக்கு வருகின்ற வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதால் தினசரி அந்த வழியாக கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.  தினசரி இருபுறமும் நீண்ட நேரம் வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய அவல நிலை செயற்கையாக ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக குமரன் தனியார் மருத்துவமனைக்கு முன்பாக சாலையில் இருபுறமும் தனியார் நிறுவன வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதை முற்றிலுமாக தடைசெய்து மேற்படி சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. அவ்வழியாக நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் பலரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

இது போன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தக்கூடிய வாகனங்கள் மீது காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் சரவணக்குமார்.

By TN NEWS