Tue. Jul 22nd, 2025



1). கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே நிலையம் அருகே 15.04.2025-ம் தேதி அதிகாலை 04.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அஜ்மல் கான்(37) மற்றும் கண்ணப்பன்(25) ஆகிய இரண்டு நபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 01 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, மேற்கண்ட இரு நபர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

2). இரு சக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

திருப்பூர் மாநகரம், 15-வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், சக்தி மளிகை கடை எதிரே உள்ள வீதியில், சதீஷ் குமார் (31) என்பவர் 14.04.2025-ம் தேதி அன்று தனது மாமனார் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு நடந்ததாக 15-வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து மேற்கண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபர் ராஜசேகர்(27), த/பெ.பழனிசாமி என்ற விபரம் தெரியவந்தது. மேற்படி நபர் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

3). பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

I. திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் சிக்னல் அருகே பாலியல் தொழில் நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அனுப்பர்பாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது ராஜ்குமார்(45) என்ற நபர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேற்படி ராஜ்குமார் என்ற நபர் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட நபரை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டது.

II. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரு.வி.க. நகர் இரண்டாவது வீதி அருகே பாலியல் தொழில் நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது 50 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது.

மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்டவரை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டது.

திருப்பூர் சரவணக்குமார் – செய்தியாளர்.

By TN NEWS