உங்களிடம் 18000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.?என்ன வேண்டுமானாலும் செய்யலாம்….
🟢🔴🟢
உலகின் செல்வச்செழிப்புமிக்க நகரத்தில் சொத்துக்கள் வாங்கலாம். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு தீவே வாங்கலாம். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு பிளைட்டர் ஜெட் விமானம் கூட வாங்க முடியும், வெறும் 300 கோடி மட்டும் தான். இங்கே கோடீஸ்வரர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கார் ஓட்டி பழக்க ஒரு மாருதி கார் வாங்குவதை போலத்தான் ஜெட் விமானம் வாங்குவதும். தமிழகத்தில் நம்பர் ஒன் குடும்பம், நம்பர் ஒன் சானல் அதிபர்களுக்கு சொந்தமாக ஜெட் விமானம் இருக்கிறது என்பது இங்கே கூடுதல் தகவல்.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். கணக்கில்லாத வருமானம் வரும் போது மனித மனம் என்ன செய்யும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அப்படிப்பட்ட கணக்கில்லாத பணம் கையில் இருந்தும், மண்ணைப் பற்றியும், மக்களை பற்றியும், நாட்டை பற்றியும் ஒருவர் நினைக்கிறார் என்றால் அவர் எவ்வளவு போற்றுதலுக்குரியவர்.
அப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய ஒரு நபர் தான் திரு ஸ்ரீதர் வேம்பு. சோகோ கார்ப்பரேஷன் நிறுவனத்தை உருவாக்கியவர்.
உலகின் முன்னணி சாப்ட்வெர் நிறுவனங்கள் இருக்கும் இடமான கலிபோர்னியாவை விட்டு, இந்தியாவில், தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் தனது அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய முடிவு. அவர் நிறுவனத்திலேயே எவ்வளவு பேரை கன்வின்ஸ் செய்ய வேண்டியதிருக்கும். ஆனாலும் திடமாக அவர் எடுத்த முடிவு இன்று தமிழத்தில் தென்காசிக்கு என்று ஒரு அடையாளத்தை தந்திருக்கிறது.
ஒரு திடமான முடிவை எடுத்தது மட்டுமில்லாமல் அதை திறம்பட செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு. அவரின் இந்த முடிவால் தென்காசி பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் கணக்கில் அடங்காதது.
தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிக சம்பளம் வழக்கும் நிறுவனம் சோகோ கார்ப்பரேஷன் தான். இதன் மூலம் தென்காசி சுற்றுவட்டாரங்களில் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது.
மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்களுக்காக சோகோ பள்ளி ஒன்றை நடத்துகிறது. அதில் உலகத்தரத்திலான கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் வரும் காலத்திற்கு தேவையான சாப்ட்வெர் இன்ஜினியர்கள் இங்கிருந்தே உருவாகிறார்கள். பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதே தனது குறிக்கோளாக கொண்டிருக்கும் சோகோ கார்ப்பரேஷன் தென்காசி அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர்களில் பலருக்கும் காலேஜ் டிகிரியே இல்லை. அவர்கள் அனைவருக்கும் சாப்ட்வெர் தொடர்பாக ட்ரைனிங் தரப்பட்டு வேலை கொடுக்கப்படுகிறது.
மத்தளம்பாறை கிராமத்தில் வெள்ளை வேஷ்டி, சாதாரண சட்டி அணிந்த ஒரு நபர் சைக்கிளில் சுற்றி கொண்டிருப்பதை பார்க்கக்கூடும். அவர்தான் இந்தியா அமேரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான்,உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகள் வைத்துள்ள, 9000 பேருக்கு மேல் வேலை செய்யும், 18000 கோடி மதிப்புள்ள கம்பெனியின் சேர்மேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நம்மை சுற்றி இப்படிப்பட்ட ரியல் ஹீரோக்கள் இருக்கும் போது நாம் எப்போதும் நிழல் ஹீரோக்களையே தேடுகிறோம். தமிழத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகரை அறிந்த அளவுக்கு கூட ஸ்ரீதர் வேம்புவை பற்றி தெரியாது என்பது தான் கசப்பான உண்மை.
இந்த சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ஸ்ரீதர் வேம்பு போன்றவர்களை அடையாளம் கண்டு போற்றுவதன் மூலமே இன்னும் சிறப்பான சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.🌷✨
மு.சேக் முகைதீன்