Tue. Jul 22nd, 2025


“நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்”

“முதியவர்கள் ரேஷன் கடைக்கு வராமல் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை பெற நடவடிக்கை

நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்”

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – விழிப்புணர்வு

தமிழக முழுவதும் இளம் நுகர்வோர்
இடையே நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்

“நுகர்வோர் குறைதீர் வலைத்தளம்”

“நுகர்வோர் தங்களது குறைகளை வலைதளத்தில் எளிதில் பதிவு  செய்ய தனித்துவம் வாய்ந்த நுகர்வோர் குறைதீர் வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்படும்”

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில்
3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட
நவீன சேமிப்புக் கிடங்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

பொது விநியோகத் திட்டத்திற்கு கணினிகள் வழங்கப்படும் .

பொது விநியோகத் திட்டம் தொடர்பான அரசு திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்திட மின் அலுவலக செயலாக்கத்தினை (e-Office) 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்திட  போதிய கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் மின் உருவாக்கக் கருவிகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பழமையான 6 சேமிப்பு வளாகங்களில் உள்ள 30 கிடங்கு கட்டிடங்கள் ரூ.17.49 கோடியில் புனரமைக்கப்படும்.

“நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும்”

“செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும்”

“3,500 பேருக்கு வேலை வாய்ப்பு”

நுகர்வோர் வாணிபக் கழகத்தில் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

19 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது”

“நவீன மயமாக்கப்படும் அமுதம் அங்காடிகள்”

“மக்கள் வேண்டுகோளை ஏற்று பகுதி நேர ரேசன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது

அமுதம் அங்காடிகள் படிப்படியாக நவீன மயமாக்கப்படும்”

50 ரூபாய் செலுத்தி குடும்ப அட்டை”

குடும்ப அட்டை தொலைந்தவர்கள் 50 ரூபாய்
செலுத்தி குடும்ப அட்டை நகலை பெற்று
பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

2023 ஏப்ரல் 5 அன்று துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி குடும்ப அட்டையை தொலைத்த 9 லட்சத்து 44ஆயிரத்து 452 நகல் குடும்ப அட்டைகள் வழங்கப்பப்பட்டுள்ளன

ரூ.17.49 கோடியில் புனரமைப்பு

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில்
50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பழமையான 6 சேமிப்பு வளாகங்களில் உள்ள 30 கிடங்கு கட்டிடங்கள் ரூ.17.49 கோடியில் புனரமைக்கப்படும்

வட மாவட்டங்களில் நவீன நெல்சேமிப்பு வளாகங்கள்

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்
6 எண்ணிகையிலான மொத்தம் 49,000 மெ.டன் கொள்ளளவில் மேற்கூரை அமைப்புடன் கூடிய
நவீன நெல்சேமிப்பு வளாகங்கள்
ரூ.69 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்

“ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது”

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்
“ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது” என்று
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் – நிரந்தரக் கட்டிடங்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தின் கீழ் 50 நேரடி
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு
நிரந்தரக் கட்டிடங்கள் தலா ரூ.30 லட்சம் வீதம்
ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச்
சொந்தமான 12 நவீன அரிசி ஆலைகளில்
தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட
புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்
ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்

500 கிலோ வாட் திறன் மின்மாற்றிகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச்
சொந்தமான 12 நவீன அரிசி ஆலைகளில்
500 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றிகள்
ரூ.11 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

கல்வித் தகுதிகள் மறு ஆய்வு 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்
நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும்
பல்வேறு நிலைப் பணியாளர்களுக்கு 1989-இல்
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகள்
மறு ஆய்வு செய்து திருத்தியமைக்கப்படும்

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பு

பரீட்சார்த்த முறையில் தஞ்சாவூர் மாவட்டம்,
ஒரத்தநாடு வட்டம், பஞ்சநதிக்கோட்டை கிராமத்தில்
மாநில அரசின் நிதி உதவியுடன் கடந்த மார்ச் 29,
அன்று திறந்து வைக்கப்பட்ட அதிகத்திறன் கொண்ட நேரடி
நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாகச் செயல்பட்டு
விவசாயிகளிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

சிறந்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு விருது

சிறந்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரொக்க தொகை, பரிசுகள் வழங்கப்படுகிறது

மாவட்டம், மாநில அளவில் தலா
6 பேருக்கு விருது வழங்கப்படுகிறது

ரூ.10 கோடியில் அதிநவீன கருவிகள் 

பரீட்சார்த்த முறையில் தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிபக் கழகத்தின் சென்னையில் உள்ள மாதவரம்
சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் அதிநவீன கருவிகள்
மற்றும் இயந்திரங்களை ரூ.10 கோடி மதிப்பீட்டில்
மாநில அரசின் நிதி உதவியுடன் நிறுவி
அதன் செயல்திறன் மேம்படுத்தப்படும்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பதவி
உயர்வின் மூலம் நியமிக்கப்படும் இளநிலை தர
ஆய்வாளர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர்
கல்லூரியில் ஆண்டுதோறும் 50 பேருக்கு
அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும்

100 பணியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்
பதவி உயர்வு பெறும் இளநிலை உதவியாளர்களுக்கு
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில்
ஆண்டுதோறும் 70 முதல் 100 பேருக்கு
அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும்

*அமைச்சர் சக்கரபாணி*

தொகுப்பு: மு. ஷேக் முகைதீன்.

By TN NEWS