Sun. Oct 5th, 2025

திருப்பூர் ஏப் 05,



*தேர் ஓடுகின்ற வீதிகளில் ஆறு மாதங்களாக இருளில் மூழ்கிய கடைகள்.*

*புதைவட மின்சார கேபிள் அமைக்கப்பட்டதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்து அனைவருக்கும் முழுமையாக இணைப்பை வழங்க வேண்டுமென அவிநாசியில் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.*

*மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் KAK.கிருஷ்ணசாமி,  ஈ.பி.அ.சரவணன் உள்ளிட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.*

*மேற்பார்வை பொறியாளர், கோட்ட செயற்பொறியாளர்களிடம் நேரடியாக குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி காணலாம் என மின்வாரியம் அறிவித்த நிலையில் அவிநாசி கோட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மேற்பார்வை பொறியாளர், கோட்ட செயற்பொறியாளர்கள் இருவரும் கலந்து கொள்ள வில்லை.*

அவிநாசியில் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் தான் முகாமை நடத்தினர்.

இந்த முகாமில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில்…

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஆலய தேர் ஓடுகின்ற வீதிகளில் ஆறு மாதங்களாக கூடுதலாக பணம் கொடுக்காததால் மின் இணைப்பு இன்றி மின் கட்டணம் செலுத்தி வருகின்ற ஏழை வியாபாரிகளுக்கு உடனடியாக புதைவட கேபிள் வாயிலாக இணைப்பு வழங்க வேண்டுமெனவும் மின்சார கேபிள் புதைத்ததில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதால் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஆலய திருவிழாக் காலங்களில் திருத்தேர் உலா நடைபெறும்போது மின்கம்பங்கள் வழியே செல்லும் மின்கம்பிகளில் தேர் உரசி விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு மின் விநியோகத்தை நிறுத்துவது வழக்கம்.

   தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளும் தேரோட்டத்திற்குத் தடையாக இருந்து வந்தன. இதனால் தேரோட்டத்தின்போது பொதுமக்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது.

         இந்நிலையில் அவிநாசி நகரப் பகுதியில் உள்ள மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைவட கம்பிகளாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து தேர் ஓடும் வீதிகளில் மின் கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அவிநாசி தேர் ஓடுகின்ற வீதிகளில் புதைவட மின்சார கேபிள் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு எழுதியுள்ளது.

தேர் ஓடும் வீதியில் இருளில் மூழ்கிய வர்த்தக இணைப்புகளால் பெரும் துயரத்தில் ஏழை வியாபாரிகள்புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அவிநாசி நகராட்சியில் தடைசெய்யப்பட்டுள்ள வர்த்தக இணைப்பை வியாபாரிகளுக்கு விரைவாக வழங்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.

சரவணக்குமார்

திருப்பூர் மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS