பெப்ஸி,கோக், பேன்டா, தம்ஸப், காபி, டீ, பியர், ஒயின், விஸ்கி, லிம்கா, ஐஸ் காபி, க்ரீன் டீ….
இது எல்லாம் தனி, தனி பானங்கள் என நாம் நினைத்தாலும், அனைத்து பானங்களுக்கும் பொதுவாக இருப்பது தண்ணீர்தான். அதாவது அனைத்து பானங்களும் 95% தன்ணீர் தான். மீதம் 5% தான் சர்க்கரை, ஆல்கஹால், கபீன், பால், க்ரீம் என மாறுபடும்
“ஆகா, உலக மகா கண்டுபிடிப்பா இருக்கே” என டென்சனாக வேண்டாம். யோசித்து பார்க்கவும், உலகெங்கும் எத்தனை கோடி கேன்கள், பாட்டில்களில் பானங்கள் கொன்டுசெல்லபடுகின்றன என?
அதில் 95% தண்ணீர்தான் என்கையில் வெறும் தண்ணீரை சுமந்து கொண்டு உலகின் ஒரு கோடியில் இருந்து மறுகோடிக்கு பானங்கள் செல்கின்றன. உதாரணமாக இந்தியாவில் உற்பத்தி ஆகும் தம்ஸ் அப், லிம்கா எல்லாம் அமெரிக்காவில் கிடைக்கிறது. தண்ணீரை சுமந்துகொன்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பலோ, விமானமோ வருகையில் எத்தனை பணம், எரிபொருள், மனித சக்தி வீணாகிறது?
இதற்கு என்ன செய்யலாம்? அமெரிக்காவில் தம்ஸப், லிம்கா எல்லாம் குடிக்கலைன்னா ரசிகர்கள் போராட்டம் பண்ணுவார்களே?
“கவலையே வேண்டாம்” என்கிறது கேனா பிவரேஜ் பிரிண்டர். பாரத் வாசன் எனும் இந்தியர் துவக்கிய அமெரிக்க கம்பனி இது.
சுமார் ரூ.75,000 மதிப்பில் ஒரு ப்ரிண்டரை வைத்துள்ளார்கள். அதனுள் ஒவ்வொரு பானத்தையும் மூலக்கூறு அளவில் பிரித்து புரக்ராம் செய்துள்ளனர். நீங்கள் ஒரு மளிகைகடை வைத்திருந்து இந்த ப்ரின்டரை வாங்கிக்கொள்ள வேண்டும். உங்கள் கடையில் பெரும்பாலும் கொக்கோகோலா, லிம்கா மற்றும் ஜூஸ் வேண்டும் என்றால் அதற்கான கார்ட்ரிட்ஜளை வாங்கிகொள்ளலாம். அதன்பின் தன்ணீரை நிரப்பி, பொத்தானை அழுத்தினால் பெப்ஸி, லிம்கா, தம்ஸப், ஆரஞ்ச் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் என என்ன பானம் வேண்டுமோ அது கிடைக்கும்.
பெப்ஸி, கோக் கம்பனிகளின் பானங்கள் மூலகூறு அளவில் உடைக்கபட்டு கார்ட்ரிட்ஜளில் அடைக்கபட்டு அனுப்பபடும். ஒரு லாரியில் வந்து இறங்கவேண்டிய அளவு பெப்ஸி பாட்டில்களை ஒரு சின்ன பெட்டியில் வைத்து அனுப்பமுடியும்
பெப்ஸி, கோக் ஏற்கனவே அப்படிதான் பவுடர் வடிவில் அனுப்புகின்றன. ஆனால் இது அதையும் விட சிறியவடிவில் அனுப்புகிறது. அணுஅளவில் மூலபொருட்கள் உடைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன. அதை இந்த ப்ரிண்டர் மிளுருவாக்கம் செய்கிறது
“பெப்ஸி,கோக் எல்லாம் எங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் அவர்களுக்கு காசு மிச்சமாகும். பெப்ஸி,கோக் எனும் பெயரில் விற்கலாம். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனில் கானா கோலா எனும் பெயரிலேயே விற்போம்” என்கிறது கம்பனி
தவிர புதியதாக விரும்பும் பானங்களை எல்லாம் இதில் ப்ரிண்ட் செய்துகுடிக்கலாம். “ரோஸ் லெமன் பெப்ஸி க்ரீன் டீ வேணுமா?” நோ பிராப்ளம்
“எங்கள் 150 ஆன்டு வரலாற்றில் இப்படி எத்தனை பேரை பார்த்திருப்போம்? நீயும் வந்து ஆடு மகனே. பார்த்துக்கலாம்” என கமுக்கமாக இருக்கின்றன பெப்ஸி,கோக்.
மு. சேக் முகைதீன்.

