புதிய சட்டத்திருத்தத்தால் எழும் எதிர்ப்புகள்:
பாஜக தலைமையிலான மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்டத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இனி பிற மதத்தினரும் வக்ஃபு வாரிய நிர்வாகிகளாக நியமிக்கப்படலாம் என்கிறது புதிய சட்டத்திருத்தம். இந்தத் திட்டம், முஸ்லிம் சமூகத்தில் பெரும் கவலையையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
வக்ஃபு சொத்துக்கள் என்பவை என்ன?
முஸ்லிம் சமுதாயத்தினர் தமது சொத்துகளை “இறைவழியில் பயன்படட்டும்” என பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட சமய பயன்பாடுகளுக்காக தானமாக வழங்குவது வக்ஃபு எனப்படுகிறது. நிலம், கட்டிடம், மின் சாதனங்கள், வாகனங்கள், உணவுப் பாத்திரங்கள் என பலவகையான அசையும், அசையாத சொத்துக்கள் இதில் அடங்கும்.
இந்த வக்ஃபு சொத்துக்கள் ஒரு முறையைப் பின்பற்றிக் கையாளப்படுவதால், அதை விற்பதோ, தனிநபர் உரிமையாக மாற்றுவதோ சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை. எனவே, இந்த சொத்துக்களில் அரசியல் ஊடுருவலால் ஊழல் நிகழக்கூடிய வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
பாஜக நடவடிக்கையின் பின்னணி
நாட்டில் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில்கூட, வக்ஃபு வாரியங்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளே உள்ளனர். காரணம், பாஜகவில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களும் எம்.பி.க்களும் இல்லாத நிலை. எனவே, தங்கள் கட்சியினரை வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் நியமிக்க புதிய சட்ட மாற்றத்தை கொண்டு வர பாஜக முன்வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மத பண்டிதர்கள் விமர்சிக்கின்றனர்.
மசோதாவின் நிலை
தற்போது மாநிலங்களவையில் என்.டி.ஏ. கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதா கூட்டுக்குழுவில் காய வைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நவம்பர் மாதத்தில் நடைபெறும் மூன்று மாநில தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, சட்டத்திருத்தத்தை மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னறிவிப்பு: மீண்டும் ஒரு புதிய திருத்தம்?
இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக, வக்ஃபு சொத்துகளை விற்க அனுமதிக்கும் மற்றொரு சட்டதிருத்தத்தை கொண்டு வருவார்கள் எனக் கூட எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இலவசமாக வழங்கப்பட்ட மத சொத்துகளை சிலரால் ஆக்கிரமிக்க வாய்ப்பு உருவாகும் என்ற அபாயமும் எழுந்துள்ளது.
முடிவுரை
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான இந்த நடவடிக்கைகள், சமூக நீதிக்கும், மத சொத்துகளின் பாதுகாப்பிற்கும் எதிரானது என பலர் கண்டிக்கின்றனர். இதை சட்ட ரீதியாக எதிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறியீடு செய்யப்படுகிறது.
பின் குறிப்பு:
தற்போதைய ஒன்றிய அரசின் நடைமுறைகள் மற்றும் வருங்கால இந்தியாவின் சமூக நல்லிணக்கம் ஒரு கேள்விக்குறியாக மாறும், ஒற்றுமையாக வாழும் அனைத்து சமூகங்களும் பிரிவினைவாத எண்ணத்துடன் நாட்டின் ஒற்றுமை சீர்குலைந்து போக வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு:
இந்துத்துவ கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் பா.ஜ.க..?
இந்து சமுதாய மக்கள் வருங்கால வாழ்வாதாரம் குறித்து என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது..?
மாறாக தற்கால இந்தியாவில், இந்து கோவில்கள் மற்றும் அதன் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்கி வருகிறது.
கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆலயங்களை மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அந்த சமுதாயத்தின் துறைகளில் சம்பந்தப்பட்ட குழுவின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.
இதுபோல இஸ்லாமிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வக்ஃப் ஃபோர்ட் நிர்வாகம் செய்து வருகிறது.
இஃது போன்ற இன்னும் பல சமுதாயங்களில் அவர்கள் சொத்துக்கள் அவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இங்கு முக்கியமான ஒன்று, இஸ்லாமிய சமூகத்தின் வக்ஃப் சொத்துக்கள் மட்டுமே படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது பொதுமக்களின் கவனத்திற்கு வருவதில்லை. காரணம் அரசியல் தலையீடும் ஆசைகளும் காரணம் என வைத்துக்கொள்வோம்.
இன்றளவும் இஸ்லாமிய சமூகத்தின் அனைத்து பிரிவினரும் தங்களின் அசையா சொத்துக்களை வக்ஃப் (தானமாக) இறைவனின் பெயரில் கொடுத்து வருவது தான் உண்மை.
இந்த சொத்துக்கள் மீது மோகம் கொண்டு அபகரிக்க இந்த அரசியல் நாடகம் அரங்கேறியது.
இன்று இஸ்லாமிய சமூகத்தின் சொத்துக்களின் பராமரிப்பில் மாற்று சமுதாயத்தினரை இணைக்க துடிக்கும் இந்த அரசியல் தலைவர்கள்,
வருங்காலத்தில்;
அறநிலையத்துறையில் இஸ்லாமியர்கள் வருவதை தடுக்க முடியுமா?
கிறிஸ்தவ சமுதாயத்தின் துறைகளில் மாற்று சமுதாயத்தின் சகோதரர்கள் வருவதை தடுக்க முடியுமா?
சீக்கிய குருக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளிலும் மாற்று சமுதாயத்தினர் வருவதை தடுக்க முடியுமா?
இன்னும் பல சமுதாயங்களில் இதே கேள்விகள் நீண்டுகொண்டே போகும்?
இந்திய அரசியல் சாசனம் சரியாக முறையாக அனைத்து சமூகத்தின் சொத்துக்களின் பாதுகாப்பு கருதி எழுதப்பட்டுள்ளது.
தற்காலத்தில் நடக்கும் அரசியல் சதுரங்க நாடகத்தின் ஆபத்தான சூழ்நிலை வருங்காலத்தில் நமது அனைவரின் சந்ததியினர் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலான போக்கில் ஆரம்பமாகிறது.
இதை தவிர்க்க நடுநிலையாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என்பது அனைத்து சமுதாய மக்களின் ஒருமித்த கருத்து மற்றும் வேண்டுகோள்.
மு.சேக் முகைதீன்.

