Tue. Jul 22nd, 2025



புதுச்சேரியில் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளரை சந்தித்த புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிர்வாகிகள்

புதுச்சேரி: புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிர்வாகிகள் புதுச்சேரி மாநிலத்தில் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் திரு V.பாஸ்கரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் சிறைச்சாலையின் முக்கியத்துவம், சிறைவாசிகளுக்கான வேளாண்பணி மற்றும் தொழில்வாய்ப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் ஆப் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு R.மைக்குடி, மாநில பொதுச்செயலாளர் திரு S.சிவராஜ், புதுச்சேரி மாநில இயக்குனர் திரு வேலவன் மற்றும் மாநில செயலாளர் திரு சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

– ராமர், செய்தியாளர், திருச்சிராப்பள்ளி

By TN NEWS