தருமபுரி: புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் நோன்பிருந்து, இறை வழிபாட்டில் ஈடுபட்டு, சமூகத்தில் அன்பும் அமைதியும் நிலைபெற அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்லாமிய மக்கள், ரமலான் மாதத்தில் பகலில் உண்ணாமலும் பருகாமலும் நோன்பிருந்து, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, ஏழை எளியோருக்கு உதவி செய்து, இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இந்த புனித நாளில், மத நல்லிணக்கம் வேரூன்றி, உலகில் அமைதி நிலைபெற அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் வே.பசுபதி தெரிவித்துள்ளார்.
இறை தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை பின்பற்றி, ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை கடைப்பிடித்து, நாட்டில் சமாதானம் தழைக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
— அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம், சர்வதேச அமைப்பு
தருமபுரி மாவட்ட செயலாளர்
உள்ளாட்சி ரவுண்ட்ஸ்
சட்ட களம்
தமிழ்நாடு டுடே
மாவட்ட செய்தியாளர்
வே.பசுபதி