Tue. Jul 22nd, 2025

வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை ஈதுல் பித்ர் கொண்டாட்டம்

ரியாத், மார்ச் 29:
சவுதி அரேபியாவில் இன்று (29.03.2025) ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளதால், நாளை (30.03.2025) ஞாயிற்றுக்கிழமை ஈதுல் பித்ர் பண்டிகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியைப் பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் நாளை ரமழான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ரமழான் நோன்பு நிறைவு செய்த மகிழ்ச்சியில், நாளை ஈத் தொழுகையில்கலந்து கொண்டு, உறவினர்களுடன் சந்தித்து, பரிமாறி, பண்டிகையை கொண்டாட நமது தமிழ்நாடு டுடே வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மு.சேக் முகைதீன்

By TN NEWS