Tue. Jul 22nd, 2025

உசிலம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைக்காக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி, மார்ச் 29:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதை கண்டித்தும், உடனடி வழங்கலை வலியுறுத்தியும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் திமுகவின் சார்பில் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சீமானுத்து பகுதியில், உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் போக்கை கண்டித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி, ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்

By TN NEWS