Sat. Jan 10th, 2026

உலகிலேயே மிகச்சிறிய ஆடு – கேரள விவசாயியின் ‘கரும்பி’ கின்னஸ் சாதனை!

திருவனந்தபுரம், மார்ச் 24:

கேரளாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் ‘கரும்பி’ எனும் பெண் ஆடு, உலகிலேயே உயிர்வாழும் மிகச்சிறிய ஆடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

2021ல் பிறந்த இந்த ஆட்டுக்கு தற்போது 4 வயதாகிறது. முழு வளர்ச்சி அடைந்த நிலையில் இதன் உயரம் 1 அடி 3 இன்ச் (40.50 செ.மீ.) மட்டுமே உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கின்னஸ் உலக சாதனையில் இந்த சிறப்புப் பதிவு, இந்தியாவில் உள்ள மரபு செழுமை கொண்ட ஆடுவகைகளின் முக்கியத்துவத்தையும், சிறப்பு இனங்கள் வளர்ப்பின் பலன்களையும் உலகளவில் உணர்த்தியதாக விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர்

தென்காசி மாவட்டம் அமல்ராஜ்.

By TN NEWS