Tue. Jul 22nd, 2025

2026க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா – அமித்ஷா உறுதி

நியூடெல்லி, மார்ச் 20:

2026 மார்ச் 31க்குள் இந்தியா முழுவதும் நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

சத்தீஸ்கர் அருகே 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்ட அமித்ஷா, நக்சலைட்டுகளுக்கு எதிரான மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகும் எனத் தெரிவித்தார்.

“மோடி அரசு நக்சல் பிரச்சனைக்கு இரக்கமற்ற அணுகுமுறையுடன் செயல்படுகிறது. 2026 மார்ச் 31க்குள் நாடு முழுவதும் நக்சலைட்டுகளிலிருந்து விடுபடும்” எனவும் அவர் உறுதி அளித்தார்.

இந்த நடவடிக்கைகள், நாட்டின் உள்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொதுமக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கவும் எடுக்கப்படும் முக்கியமான முயற்சி என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

— நமது செய்தியாளர்

By TN NEWS