Wed. Jul 23rd, 2025

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர எல்லைக்குள் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் அடுப்பு வைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

சமூக ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டு
இந்த பகுதி முழுவதும் பத்து முக்கிய ஜும்மா மசூதிகள் அமைந்துள்ளன. அவை:

மணக்காடு வலியபள்ளி

மணக்காடு தைக்காபள்ளி

பாளையம் ஜும்மாபள்ளி

அட்டகுளங்கரை ஜும்மா பள்ளி

சாலைபஜார் ஜும்மா பள்ளி

கருப்பட்டிகடை ஜும்மா பள்ளி

தம்பானூர் ஜும்மா பள்ளி

கரமனை ஜும்மா பள்ளி

கொஞ்சிறவிளை மர்க்கஸ்

கமலேஸ்வரம் மர்க்கஸ்


இந்த மசூதிகளில் எந்தவித தடங்கலும் ஏற்படவில்லை. வழக்கம்போல தொழுகைகள் நடைபெற்றன. முஸ்லிம் சமூகமும் இந்து சகோதரிகள் பகவதி அம்மன் வழிபாட்டில் ஈடுபட ஒத்துழைப்பை வழங்கியது.

மசூதி நிர்வாகங்களின் உதவி:
நேற்று மாலை முதல் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மசூதிகளின் அருகில் தங்கி, பொங்கல் வழிபாடு செய்ய ஏற்பாடுகளை செய்தனர். மணக்காடு, பாளையம் பள்ளிவாசல் நிர்வாகங்கள் பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை, சமையல் பொருட்கள் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை செய்தன.

முஸ்லிம் சகோதரர்களின் ஆதரவு:

பல முஸ்லிம் வீட்டு வளாகங்களில் இந்து சகோதரிகள் ஓய்வெடுக்க, பொங்கல் சமையற்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மணக்காடு வலியபள்ளி ஜமாஅத் வளாகத்தில் பத்து நாட்களுக்கும் காவல் கட்டுப்பாடு அறை, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

நோன்பு திறக்கும் நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மசூதியில் வந்து நோன்பு கஞ்சி அருந்தியும் சென்றனர்.


சமூக ஒற்றுமையின் அழகிய நிலை:
திருவனந்தபுரத்தில் மதங்களை தாண்டிய இந்த ஒற்றுமையான சூழல், சமூக சமத்துவத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மதம் மனிதனை பிரிக்க அல்ல, இணைக்கவென்றே உருவாகியுள்ளது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளது.

– திருவனந்தபுரம் செய்தி – மு.சேக்முகைதீன்.

By TN NEWS