கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (Crime Meeting) நடைபெற்றது.
07.02.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் குற்ற நிலைபேறு, நிலுவையில் உள்ள வழக்குகள், கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக தீர்க்க வேண்டிய வழக்குகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
குற்ற வழக்குகளை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவும், பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. சரவணன், திரு. மணிகண்டன், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் செய்தியாளர். V.ஜெயசங்கர்