Wed. Jul 23rd, 2025

முதலமைச்சர் திருநெல்வேலியில்: புதிய தினசரி சந்தை திறப்பு

திருநெல்வேலி, பிப்ரவரி 6: தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாளையங்கோட்டை தினசரி சந்தையை இன்று மாலை அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சியின் 55 மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலப்பாளையம் 50-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், தமுமுக-மமக மாவட்ட தலைவரும், மாநகராட்சி திட்டக்குழு உறுப்பினருமான K.S. ரசூல் மைதின் M.C. உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாண்புமிகு முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்றனர்.

உலகப் புகழ்பெற்ற நெல்லை இருட்டு கடை அல்வா கடையியல் தொன்மை மாறாத சுவையுடன் கூடிய அல்வா (ஹல்வா) வின்  நகரமான நெல்லை டவுனில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயம்.

மு.சேக் முகைதீன்.

By TN NEWS