அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் – தொடரும் துப்பறியும் நடவடிக்கை.
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. முதல் கட்டமாக 205 இந்தியர்கள் அமெரிக்காவின் C-17 ராணுவ விமானம் மூலம் டெக்சாஸிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வரும் 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வாஷிங்டனில் நேரில் சந்திக்க உள்ளார். இதை முன்னிட்டு, சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது.
முதல் கட்டமாக 200க்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 18,000க்கும் அதிகமான இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நாடு கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– மு. சேக் முகைதீன்.
