மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையேற்று வழிநடத்தினர்.
அமைப்பின் ஒவ்வொரு கிளையிலும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உறுதியாக செயல்பட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போல், 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
இதற்காக தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் நோக்கில், உசிலம்பட்டி தொகுதியும் அதன் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. உசிலம்பட்டியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
-வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.
