திருப்பூர் ஜன: 27,,
திங்கள்கிழமை,,
*குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் காஸ் சிலிண்டர்களை வைத்துள்ளதால் தீ விபத்து அபாயம்.*
*தொண்டை, கண் எரிச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த நச்சு புகையை சுவாசித்தால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்புகள் மற்றும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதால் உடனடியாக உரிய தீர்வுகாண ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.*
*மக்களுக்களுடைய அதிக அளவில் வசிக்கின்ற பகுதியில் சட்டவிரோதமாக 100 க்கும் கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை பழைய இரும்பு கடையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இரும்பு, பிளாஸ்டிக், பேட்டரிகள் போன்ற பொருட்களில் வெயிலுடன் காற்றும் வீசினால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு.*
*குடியிருப்பு பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் கரும் புகை காற்று மாசால் மக்கள் அவதி.*
*ஒயர், பிளாஸ்டிக், டயரை எரிப்பதால் கருமையான நச்சு புகையால் சுவாசிக்க முடியாமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அவதி.*
*திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.*
*அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு மகாராஜ் அவர்களிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்திருந்தார்.*
அதில் திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட 2 வது மண்டலம் 4 வது வார்டு தோட்டத்துபாளையம் பகுதியிலுள்ள நெடுஞ்சாலை பொது இடத்திலுள்ள பழைய இரும்பு கடையில் 100 க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள், வயர்கள், பழைய குப்பை பொருட்களை எரிப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் எற்படுவதோடு ஏதேனும் பெரும் தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் உடனடியாக மேற்படி பழைய இரும்பு கடையை அப்புறப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டத்துபாளையம் பகுதியிலுள்ள பிரதான சாலையிலுள்ள பழைய இரும்பு கடையில் பாதுகாப்பற்ற முறையில் 100 க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்களை வைத்துள்ளதால், விபத்து அபாயம் உள்ளது.
திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட 2 வது மண்டலம் 4 வது வார்டு தோட்டத்துபாளையம் பகுதியிலுள்ள பூலுவப்பட்டி வாவிபாளையம் பிரதான சாலையிலுள்ள பொது இடத்திலுள்ள பழைய இரும்பு கடை உள்ளது.
இந்த பகுதிகள் முழுக்க 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது குடியிருப்பு உள்ளாதால் பொது மக்கள் அதிகளவிலாக வசித்து வருகின்றனர்.
இந்த பழைய இரும்பு கடையில் 100 க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள், வயர்கள், பழைய குப்பை பொருட்களை எரிப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் எற்படுவதோடு ஏதேனும் பெரும் தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும் பழைய இரும்பு கடையில் வயர்கள், பழைய குப்பை பொருட்களை எரிப்பதால் துர்நாற்றமும், புகை மண்டலமும் ரோடு முழுவதும் பரவி வருகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்களில் செல்வோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
பழைய இரும்பு கடையில் சட்டவிரோதமாக 100 க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்களை வைக்கப்பட்டுள்ளதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குவித்து வைக்கப்பட்டிருக்கும் கேஸ் சிலிண்டர்கள், இரும்பு, பிளாஸ்டிக், பேட்டரிகள் போன்ற பொருட்களில் தீ விபத்து ஏற்படலாம். வெயிலுடன் காற்றும் வீசினால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.
திருப்பூர் பகுதிகளிலுள்ள பழைய இரும்பு கடைகளில் அவ்வபோது தீ விபத்து ஏற்பட்டு அருகிலுள்ள பொது மக்கள் பாதித்து வருகின்றனர். எனவே மேற்படி பழைய இரும்பு கடைகளில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் குடோனில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டு அசம்பாவித நடக்கும் முன்னதாக உரிய தீர்வுகாண வேண்டும்
பழைய இரும்பு பொருட்கள் கடையின் உள்ளே பழைய எலக்ட்ரானிக்ஸ் கழிவுகளும், வெளியே அட்டைப் பெட்டிகள், இரும்பு பொருட்கள் தனித்தனியே குவித்து வைத்துள்ளனர்
பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் உள்ளதால் எளிதில் தீ பிடிக்க அதிக வாய்ப்புள்ளதால் உடனடியாக குடியிருப்பு மத்தியிலுள்ள இரும்பு கடையை காலி செய்ய வேண்டும்.
மேலும் இந்த பழைய இரும்பு கடையில் இரவு பகலாக பழைய இரும்புகளை உடைப்பது தட்டுவது என ஒரே சத்தமாக இருப்பதால் பள்ளி மாணவ மாணவர்கள், வயதான முதியவர்கள் அதிக சத்தம் காரணமாக பெரும் தலைவலியாக உள்ளது.
இந்த பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் மூச்சுதிணறல், இருமல், தோல் நோயால் பாதிக்கப்படுவதோடு பெரும் தீ விபத்து ஏற்பட்டால் அதிகளவிலான உயிர் சேதம் ஏற்படும் அபாயம் நிறைந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக முறையாக நேரிடையாக கள ஆய்வுகளை நடத்தி ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ள 100க்கும் கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை முற்றிலுமாக அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்தும், குடியிருப்பு பகுதியிலுள்ள பழைய இரும்பு கடையை மக்களுக்களுடைய நலன் கருதி அடியோடு முழுமையாக அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்
