

பள்ளி தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர். லயன் .அமுத பிரியா அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினராக இந்தியாவின் பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் மரியாதைக்குரிய
S. வருண் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். அவ்வீரர் மாணவர்களின் முன்பு தான் கடந்து வந்த பாதையினையும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து விதத்தையும்/தடகளப் போட்டிகள் பற்றிய விபரங்களையும் எடுத்துக் கூறினார்கள்.
மாணவ மாணவியர்களின் தேசிய உணர்வினை கொண்டாடும் வகையில் வண்ண நடன நிகழ்ச்சிகளும்நடைபெற்றது.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் இனிதே நடைபெற்றது. பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.
வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

