இன்று (26-01-2025) குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வனச்சரகம் மற்றும் SWARD தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய “காட்டுத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் காட்டுத் தீ தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி உசிலம்பட்டி வனச்சரக அலுவலர் அன்னக்கொடி தலைமையில் நடைபெற்றது.
SWARD தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார். எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் பொழுது காடுகளளின் முக்கியத்துவம், அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மேலும் காட்டுத் தீ ஏற்பட்டால் அதை பொதுமக்கள் வனத்துறையோடு சேர்ந்து எவ்வாறு தடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வனவர்கள் காமராசு, வீமராஜா, கார்த்தி, வன பணியாளர்கள், வனக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடன கலைஞர்களின் ஆடல் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வனவர் காமராஜ் நன்றி உரை கூறினார்.
வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.



