Tue. Jul 22nd, 2025

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) இந்திய மக்களை குஷி அடைய செய்யும் வகையிலான புதிய சிம் கார்டு விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற சிம் கார்டுகளை 90 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைக்க உதவும் புதிய டெலிகாம் விதியை பின்பனற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், சிம் ஆக்டிவேட் செய்ய ரூ.20 முதல் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரையில், பெரும்பாலான மக்கள் ஒரே நேரத்தில் 2 சிம் கார்டுகளை (dual SIM cards) பயன்படுத்தி வருகிறார்கள். இதில் 1 சிம் கார்டை (1st SIM card) அவர்களுடைய முக்கிய எண்ணாகவும், அவர்களின் தொலைத்தொடர்பு சேவைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சிம் கார்டாக அவர்களுக்கு விருப்பமான ஒரு நெட்வொர்க்கை தேர்வு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். 2வது சிம் கார்டாக பயன்படுத்தப்படும் சிம்மை, பொதுமக்கள் பெரும்பாலும் அவர்களின் அவசரத்தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

TRAI மக்களுக்கானது.. BSNL, Jio, Airtel, Vi SIM பயனருக்கு குட் நியூஸ்:

உண்மையை சொல்ல போனால் 2வது சிம் கார்டை (2nd SIM card) பெரும்பாலான மக்கள் ஒரு பேக்கப் சிம் கார்டாகவோ (backup SIM) அல்லது எமெர்ஜென்சி சிம் கார்டாகவோ (emergency SIM) மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். 2வது சிம் கார்டை அதிகம் பயன்படுத்தாவிட்டாலும் கூட, அந்த சிம் கார்டை எப்போதும் ஆக்டிவ் (SIM card active status) நிலையில் வைத்திருப்பதையே மக்கள் ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர். இதில் யாருக்கும் மாற்று கருத்தே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கடந்த ஜூலை 2024 இல் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் (telecom companies) அறிமுகம் செய்த கடுமையான விலை ஏற்றத்திற்கு பிறகு, பொதுமக்கள் அவர்களுடைய 1 சிம் கார்டை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தவே சிரமப்பட்டு வருகின்றனர். இதில் 2வது சிம் கார்டின் நிலை பெரும்பாலான மக்களின் மொபைலில் கவலைக்கிடமானது. 2வது சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் (2nd SIM card activation) வைத்திருக்க மக்கள் சிரமப்படுவை TRAI உணர்ந்தது.

ரூ. 20 ரீசார்ஜ் முதல் 90 நாட்களுக்கு சிம் கார்டை ஆக்ட்டிவ் நிலையில் வைக்க வாய்ப்பு:

இதன் விளைவாக, இந்த சிக்கலுக்கு எளிமையாக தீர்வு காண, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) டெலிகாம் நிறுவனங்களுக்கு புதிய சிம் கார்டு விதிமுறையை (new SIM card rules) நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த புதிய விதியின் படி, இனி பொதுமக்கள் அவர்களின் இரண்டாவது SIM கார்டை 90 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யாவிட்டாலும், சிம் கார்டு ஆக்டிவ் நிலையில் (SIM card activation) வைக்கப்படும்.

அதாவது மொத்தமாக 3 மாத காலத்திற்கு சிம் கார்டை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் அதன் சேவை நிரந்தரமாக துண்டிக்கப்படமாட்டாது. ஒருவேளை, ஒரு சிம் கார்டு 90 நாட்களுக்கு எந்தவித ரீசார்ஜ்ஜும் செய்யப்படாமல் இன்ஆக்டிவ் நிலையில் (SIM inactive) வைக்கப்பட்டால், அந்த சிம் கணக்கில் ப்ரீபெய்ட் பேலன்ஸ் (Prepaid balance) இருக்கும் பட்சத்தில் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்பட்டு (Rs 20 recharge), அடுத்த 30 நாட்களுக்கு அந்த சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்படும் என்று TRAI கூறியுள்ளது.

புது 15 நாள் கிரேஸ் பீரியட் சேவை:

ஒருவேளை இந்த 90 நாட்களில் ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால், சில டெலிகாம் நிறுவனங்கள் 15 நாள் கிரேஸ் பீரியட் நாட்களை (15 days grace period) வழங்குகிறது. இந்த நாட்களுக்குள்ளாவது ரூ. 20 முதல் ரீசார்ஜ் செய்து, உங்கள் சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். இதையும் செய்யாத பட்சத்தில், அந்த சிம் கார்டு டிஆக்டிவேட் (deactivate) செய்யப்படும் என்று TRAI உத்தரவிட்டுள்ளது.

டிஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டுடனான மொபைல் நம்பரை டெலிகாம் நிறுவனங்கள் ரீசைக்கிளிங் முறையில், புது நபருக்கு வழங்கலாம் என்றும் TRAI உத்தரவிட்டுள்ளது. உங்களுக்கு கிடைக்கும் 15 நாள் கிரேஸ் பீரியட் நேரத்தில், உங்கள் நெட்வொர்க் சேவை மையம் (network service centre) அல்லது அருகில் உள்ள நெட்வொர்க் ஷோ-ரூம் (network showroom) சென்று சிம் கார்டை எளிமையாக ஆக்டிவேட் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNT சேக் முகைதீன்.

By TN NEWS