Tue. Jul 22nd, 2025



தென்காசி: 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அரவிந்த், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாகனங்களை ஓட்டுநர் உரிமம் (டிரைவர்ஸ் லைசன்ஸ்) இல்லாமல் இயக்க அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. அரவிந்த் தெரிவித்தார். “பெற்றோர்கள் அலட்சியமாக செயல்படக் கூடாது. வாகனங்களை இயக்க அனுமதிப்பதற்கு முன், குழந்தைகளின் வயது மற்றும் உரிமத்தின் இருப்பை சரிபார்க்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய அலட்சியத்தை வெளிப்படுத்தும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையிடப்பட்டுள்ளனர்.

எனவே, பெற்றோர்கள் குழந்தைகள் மீது பூரண கவனம் செலுத்தி, அவர்களை தவறான வழியில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.பி. அரவிந்த் கேட்டுக் கொண்டார்.

தகவல்: தென்காசி மாவட்ட காவல்துறை

அமல் ராஜ் – தென்காசி மாவட்ட முதன்மை செய்தியாளர்.

By TN NEWS