Tue. Jul 22nd, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளது – காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு

இந்தியா கூட்டணியின் தமிழக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு – செல்வப்பெருந்தகை

இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் – செல்வப்பெருந்தகை

பிப்ரவரி 5ம் தெதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அமல்ராஜ் – முதன்மை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்.

தேமுதிக வில் தலைமைக்கு மிக நெருக்கமாக முக்கிய தலைவராக இருந்த போதிலும் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்த அந்த கட்சியின் குறிப்பாக பிரேமலதாவின் முடிவை எதிர்த்து வெளியேறி திமுகவில் சேர்ந்தார் சந்திரகுமார்.

நம்பி வந்தவருக்கு கை கொடுக்கும் விதமாக திமுக தலைமையும் 2016ல் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக சந்திரகுமாரை அறிவித்தது. அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னவனிடம் சுமார் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் சந்திரகுமார். அப்போதும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து திமுகவில் கழக பணி செய்தார் அடுத்து வந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் அந்த தொகுதியை கேட்டு நெருக்கடி கொடுக்க, திமுக அந்த தொகுதியை விட்டுக் கொடுத்தது.

காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவனின் மகன் அறிவிக்கப்பட்டு அவர் வெற்றியும் பெற்றார். இனி இந்த தொகுதி நமக்கு இல்லை என்று மனம் தளரவில்லை, வேறு பக்கம் செல்லவில்லை சந்திரகுமார்.

ஈவி கே எஸ் மகன் எதிர்பாராத விதமாக மரணம் அடைய அதன் பிறகு ஈ வி கே எஸ் அவர்களே வேட்பாளர் ஆனார், MLAவும் ஆனார்.

இனி நமக்கு இந்த தொகுதி இல்லவே இல்லை என்று எங்கும் ஓடாமல் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து கழகப் பணிகளை செவ்வனே செய்து வந்த  சந்திரகுமாரின்  காத்திருப்பும் நம்பிக்கையும் உழைப்பும் வீண் போகவில்லை..

By TN NEWS