Wed. Jul 23rd, 2025

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுவந்தோண்டி கிராமம், ஏரிக்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த பால்ராஜ்(42/25) த/பெ.நடராஜன் என்பவரால் கடந்த 22.10.2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் பெரியவளையம் அருகே தைலம் மர காட்டில் காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டனர்.

இதை அடுத்து 25.10.2022 அன்று ஜெயங்கொண்டம் நகர காவல் ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் எதிரி பால்ராஜை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து பால்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் 04.01.2025 இன்று இவ்வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. காவல்துறையின் சார்பில் எதிரி பால்ராஜ் மீதான அனைத்து சாட்சிகளும் மற்றும் விசாரணை ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி.மலர் வாலண்டினா அவர்கள், குற்றவாளி பால்ராஜ்-க்கு இரண்டு ஆயுள் சிறை தண்டனை, 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பால்ராஜ் திருச்சி மத்திய சிறையில் காவல் துறையினரால் அடைக்கப்பட்டார்.

அரியலூர் செய்திகளுக்காக :SB. ராஜா

By TN NEWS