பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் செல்வ மகள் சேமிப்பு, சிறுசேமிப்பு, நீண்ட கால வைப்பு தொகை என பல்வேறு திட்டத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி-அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, இன்று 02/01/2025 காலை 11.00 மணியளவில் பெண்கள் முதியோர் என அனைவரும் கண்ணீர் பேட்டி.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கிளை அஞ்சலகத்தில் 1000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்
நிரந்தர வைப்பு திட்டம்,தொடர் வைப்பு திட்டம்,செல்வமகள் சேமிப்பு திட்டம் தபால் காப்பீடு திட்டம், அடல் பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், தங்களது பணத்தை சேமித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கேசராப்பட்டியில் கிளை அஞ்சல் அலுவலராக செயல்பட்ட கருகப்பூலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பொதுமக்களின் பணத்தில் சுமார் 40 லட்சத்திற்கும் மேலாக கணக்கு வைத்திருக்கும் அவர்களது கணக்கில் வரவு வைக்காமல், கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை பொதுமக்கள் கண்டறிந்த பிறகு குற்றத்தை கண்டறிந்தவர்களில் ஒரு சில பேருக்கு தனித்தனியாக பணத்தை பட்டுவாடா செய்துள்ளார்.
இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் முதியோரிடமிருந்து சுமார் 40 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்ட பெண்கள், வலையபட்டி அஞ்சலகத்தை முற்றுகையிட்டு கண்ணீர் விட்டு கதறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் ஆய்வாளர் ஸ்ரீஷாலினி, அறந்தாங்கி கோட்ட சூப்பிரண்ட் சாமிநாதன் ஆகியோரிடம், பாதிக்கபட்ட நபர்கள் சார்பில் புகார் மனு அளித்தனர்.
M. மூர்த்தி, மாவட்ட தலைமை செய்தியாளர், புதுக்கோட்டை.
