பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் கவிதா.
ஊத்துக்கோட்டை, ஜூன் 2:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு காணும் நோக்கில் நடத்தப்படும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.
நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி ச.கவிதா தலைமை தாங்கி தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
வீட்டுமனைப் பட்டா, நிலம் தொடர்பான பிரச்சனைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனுக்களை வழங்கி வருகின்றனர். மனுக்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு.
நிகழ்ச்சிக்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜேஷ் வரவேற்புரை வழங்கினார். துணை ஆட்சியர் பயிற்சி அலுவலர் சண்முகப்ரித்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
5 பிர்காக்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறலாம்.
இன்று தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கன்னிகைப்பேர், வேளகாபுரம் மற்றும் பெண்ணாலூர்பேட்டை ஆகிய ஐந்து பிர்காக்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம்.
ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 11-ஆம் தேதி நிறைவடைகிறது.
ஏராளமானோர் பங்கேற்பு.
நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை வருவாய் ஆய்வாளர் ராதிகா, வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அருள், பாகல்மேடு கிராம நிர்வாக அலுவலர் எம். பிரகாஷ் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மா. மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்